News September 15, 2025
மதுரையில் உணவு தங்குமிடத்துடன் 45 நாள் பயிற்சி

மதுரை மஹபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாள் பயிற்சி தங்குமிடம், உணவு இலவசம். விரும்புவோர் இன்று (செப்.,15) சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க தொழில் துவங்க நல்ல வாய்ப்பு
Similar News
News September 15, 2025
தியாகராஜர் கல்லூரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரிகின்றனர்.
News September 15, 2025
கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
மதுரை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

மதுரை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<