News September 15, 2025

புதுவை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பில், “எதிர்வரும் பருவமழை காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், வெளிப்புறத்தில் பேனர் வைப்பது பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே, அனுமதியில்லாமல் பேனர் வைக்கக்கூடாது அப்படி அனுமதி பெறாமல் வைக்கப்படும் பட்சத்தில் அந்த பேனர் வைத்தவர்கள் மீதும், அதனை பிரிண்ட் செய்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.

Similar News

News September 15, 2025

புதுவை அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

image

திருக்கனுார், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு பள்ளியில் ‘மிஷன் வீரமங்கை’ என்ற தலைப்பில் தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் நடந்தது. விழாவில், திருக்கனுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்புக் கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கினார்.

News September 15, 2025

புதுவை பாண்லே ஊழியரிடம் 6 சவரன் நகை பறிப்பு

image

புதுவை சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாண்லே அலுவலகத்தின் சீனியர் அசிஸ்டென்ட் விஜயலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் இரவு கதிர்காமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தனது மகள்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 15, 2025

புதுவை: மத்திய அரசில் இன்ஜினியர் பணி அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> செப்.17-ம் தேதிக்குள்ளாக விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!