News September 15, 2025
தூத்துக்குடி: நடத்துனர், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரை தனியார் பேருந்தில் ஏறக்கூடாது என கூறி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் தற்போது தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் கண்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.ஷேர்!
Similar News
News September 15, 2025
தூத்துக்குடி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க<
News September 15, 2025
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வெள்ளபாண்டியன் என்பவரின் மனைவி செல்லத்தாய் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
News September 15, 2025
தூத்துக்குடியில் குழந்தை திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே குழந்தை திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.