News September 15, 2025
விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட இனி ஆன்லைன்

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெறும் வசதியை விவேகானந்த கேந்திரம் செப்.11-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. yatra.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என விவேகானந்தா கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
குமரி: மனைவியை கொலை செய்த கணவர்

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.
News September 15, 2025
குமரி: அசைவ பிரியர்கள் கவனத்திற்கு!

குமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி கிலோ 121 ரூபாய்க்கு கறிக்கோழி விற்பனை செய்யபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கறிக்கோழி விலை கிலோ 151 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழிகள் முழு எடையை எட்டுவதற்கு முன்பே வெப்பம் காரணமாக இறந்து விடுவதால் விலை உயர்ந்துள்ளது.
News September 15, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <