News September 15, 2025
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கும், விசிக நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
அயனாவரம்: பெண் காவலருக்கு சரமாரி வெட்டு

தேனியைச் சேர்ந்த பாரதி(காவலர்). இவரது கணவர் இளவரசன். பாரதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்தும், அயனாவரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இளவரசனுக்கும், பாரதிக்கும் நேற்று அதிகாலையில் தகராறு ஏற்பட்டது. அப்போது பாரதியின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இளவரசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 15, 2025
சென்னை: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News September 15, 2025
சென்னையில் சொந்த வீடு இருக்கா?

சென்னையில் செப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு வாயிலாகவும் மற்றும் What’s App வாயிலாக 9445061913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.