News September 15, 2025
திருச்சி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலம் 1650 கட்டுமான தொழிலாளர்களுக்கு, அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தொழிலாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தை மன்னார்புரம் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து வழங்க வேண்டுமென தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியீடு

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என கழகத் தொண்டர்களை வழிநடத்தி, இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. திராவிடத்தின் அணையா விளக்கு பேரறிஞர் அண்ணாவை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
அண்ணாவை கொண்டாடுவோம்: மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனது பேச்சால், எழுத்தால், பேரறிவால் இளைஞர்களை அணிதிரள வைத்து, திராவிடக் கொள்கைகளுக்கான ஜனநாயகப் படையைக் கட்டமைத்து மாநில உரிமைகளுக்காகப் போராட வைத்தவர்! இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராட வைத்தவர். இன்று வரையிலும் கொள்கை எதிரிகளால் வெல்ல முடியாத சட்டங்களை இயற்றியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை கொண்டாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை உறியடி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (செப்.,16) இரவு கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நடைபெற உள்ளது. அன்று காலை 7:15 – 9 மணி வரை கிருஷ்ணர் சித்திரை வீதிகளில் எண்ணைய் விளையாட்டு காண்கிறார். மதியம் 3 மணிக்கு நம்பெருமாள், யாதவர் மண்டபத்தில் சிறப்பு திருவாராதனம் காண்பார். மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு தெற்குவாசல் பாதாளகிருஷ்ணன் கோயிலில், உறியடி நடைபெற உள்ளது.