News September 15, 2025
இந்தியாதான் முன்பு உலகை வழிநடத்தியது: RSS தலைவர்

3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தான் உலகை வழிநடத்தியதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நாடுகளையும் அடக்கவோ, வர்த்தகத்தை அழிக்கவோ மதமாற்றவோ இல்லை எனவும், மாறாக சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரம், அறிவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது மூதாதையர்கள் நமக்கு வழங்கிய ஞானம், இந்தியாவை 3,000 ஆண்டுகளாக சிறந்த நாடாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
கன்னி பேச்சு மூலம் கவனம் ஈர்த்த ராமதாஸ் மகள்

ஓசூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி முதல்முறையாக உரையாற்றியுள்ளார். எனது தந்தை ராமதாஸ் துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் உதாரணமானவர். அவருக்கு துணையாக நிற்பது எனது கடமை. அவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும் பாமக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது. ராமதாஸின் ஒற்றைத் தலைமையை ஏற்று, ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்

சிரஞ்சீவி, கமலுடன் தவெக தலைவர் விஜய்யை ஒப்பிட்டு விமர்சனம் செய்வது நல்லது அல்ல என்று அவருக்கு ஆதரவாக இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா களமிறங்கியுள்ளார். பல ஊர்கள் சென்று வருவதன் அடிப்படையில் அழுத்தமாக சொல்கிறேன்; விஜய்யை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான் எனக் கூறிய அவர், விஜய் வரவு அரசியலில் ஒரு அதிர்வு என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
இந்தியர் கொலைக்கு பைடன்தான் காரணம்: டிரம்ப்

USA-ல் இந்தியரான சந்திரமௌலி நாகமல்லையா கொலை செய்யப்பட்டதற்கு ஜோ பைடனின் கையாளாகாத ஆட்சிதான் காரணம் என டிரம்ப் சாடியுள்ளார். பைடன் ஆட்சியில் கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்தான் இக்கொலையை செய்ததாகவும், தன்னுடைய ஆட்சியில் USA மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், கைதான நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.