News April 11, 2024
தேர்தல் பத்திர திட்டத்தால் எந்த வருத்தமும் இல்லை

தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக எந்த வருத்தமும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “தேர்தல் பத்திர திட்டத்தின் நன்மைகள் குறித்து காலமே தீர்மானிக்கும். நாங்கள் நீதிமன்றத்துக்கு எதிரானவர்கள் அல்ல. உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
Similar News
News January 12, 2026
கோவை: செல்போனில் லிங்க் அனுப்பி மோசடி

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திரசேகர்(71). இவரது செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த இணைப்பை திறந்து பார்த்த போது, முதியவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பின் ரூ.16 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், குஜராத்தைச் சேர்த்த 10 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
News January 12, 2026
உயிர் பறிக்கும் இடமா ஹாஸ்பிடல்? EPS

உயிர் காக்கும் அரசு ஹாஸ்பிடல்கள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது கடும் வேதனை அளிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் புகுந்து மகப்பேறு வார்டு அருகே இளைஞர் ஒருவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதற்கு விளம்பர மாடல் திமுக அரசு தான் காரணம் என குற்றஞ்சாட்டிய EPS, இன்னும் 3 மாதங்களில் இதற்கெல்லாம் முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
BREAKING: ஜன நாயகன் புதிய அப்டேட்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரி, படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை நாளை நடைபெறலாம் என கூறப்படுகிறது. வழக்கை முடித்த கையோடு விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய KVN நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே உள்ளது.


