News September 15, 2025

மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்

image

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில் பின்வரும் யோசனைகளை பின்பற்றலாம்: ➤முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும் ➤எண்ணெய்யை லேசாக சூடேற்றி, முடி வேர்க்கால்களை மசாஜ் செய்யவும் ➤தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும் ➤ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Similar News

News September 15, 2025

தி.மலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்., 19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் நாளை (செப்.,16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!

News September 15, 2025

எப்போதும் சரணடைய மாட்டோம்: UK PM ஸ்டார்மர்

image

குடியேற்றத்தை கண்டித்து லண்டனில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை கண்டித்த அந்நாட்டு PM கெய்ர் ஸ்டார்மர், தேசிய கொடியை கேடயமாக பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடும் வலதுசாரிகளிடம் UK ஒருபோதும் சரணடையாது என தெரிவித்தார். மேலும், UK எப்போதும் பன்முகத்தன்மையை வலியுறுத்துவதாகவும், மக்களின் நிறத்தை வைத்து அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

News September 15, 2025

திங்களில் சிவன் அருள் பெற…

image

சிவ பெருமானுக்கு மிக உகந்த நாள் திங்கள்கிழமை எனக் கூறப்படுகிறது. இன்று, சிவனின் முழு அருளைப் பெற இம்மந்திரத்தைச் சொல்லுங்கள்.
‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க! சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்க்கையில் பாவங்கள் நீங்கும் சந்தோஷம் கூடும் என்பது ஐதீகம் Share it.

error: Content is protected !!