News April 11, 2024
மே 1 முதல் ஒன் பிளஸ் போன் விற்பனை நிறுத்தம்?

வரும் மே 1 முதல் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்தப் போவதாக சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லாப பகிர்வு, கிளைம் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 23 ரீடெய்ல் விற்பனை நிலையங்கள், 4,500 கடைகளில் ஒன் பிளஸ் விற்பனை நடைபெறாதென அறிவித்துள்ளனர்.
Similar News
News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
News August 12, 2025
இப்படி செய்வது தொழில் தர்மமா.. நீங்க சொல்லுங்க!

HR ஒருவரின் போஸ்ட் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், தங்கள் ஆபிஸில் வேலை செய்யும் Employee ஒருவர், தனது முதல் சம்பளம் வந்த 5 நிமிடங்களிலேயே வேலையை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒருவரை பல கட்ட Interview-களுக்கு பிறகு, தேர்வு செய்து வேலை கொடுத்தால், இப்படி செய்வது தொழில் தர்மமா? எனவும் அவர் கேட்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?
News August 12, 2025
ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி

முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் எப்போது முருகராக மாறினார் என்ற கேள்வி எழுவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம், முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ₹2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.