News September 15, 2025

அன்பு கரங்கள் நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நாளை (15.09.2025) காலை 10:30 மணியளவில் அன்புக் கரங்கள் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

புதுகை: பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கு குமார் (30) பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் மார்க்கெட் சாலையில் அவருக்கு எதிரே டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கணேசமூர்த்தி (24) மோதியதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

புதுகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப் 17க்குள் விண்ணபிக்க வேண்டும். B.E. முடித்தவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 15, 2025

புதுகையில் வேலை வாய்ப்பு முகாம்

image

விராலிமலை தனியார் மஹாலில் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று (செ.15) காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36 வயது இருக்க வேண்டும். மாத ஊதியம் 20,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!