News September 15, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (செப்டம்பர் 15) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News September 15, 2025
வேலூரில் பசு மாட்டிற்கு சீமந்தம்

வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், 9 மாத சினையாக உள்ள பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளார். பசுவுக்கு பட்டுப்புடவை அணிவித்து, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரித்தனர். இந்த விழாவில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த விருந்தினர்களுக்கு ஐந்து விதமான கலவை சாதங்களும், விருந்தும் பரிமாறப்பட்டது.
News September 15, 2025
வேலூர் கலெக்டர் நாளை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நாளை (செப்டம்பர் 15) கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள். காலை 9 மணியளவில்
1) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல். அதை தொடர்ந்து, 10 மணியளவில் சத்துவாச்சாரியில் உள்ள ஜே.பி.எம். திருமண மஹாலில் அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
வேலூர் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க