News September 14, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

image

புதிதாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களின் எண்ணிக்கை 1.24 கோடியாக அதிகரிக்கும்.

Similar News

News September 15, 2025

பகத்சிங் பொன்மொழிகள்

image

*முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம் *தனி ஒரு மனிதனை கொலை செய்யலாம். ஆனால், சுதந்திர வேட்கையை கொல்ல முடியாது. *கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும். *என்னுடைய ஆழ்ந்த சிந்தனையினால் தான் கடவுளை மறுக்கிறேன். மாறாக அகங்காரத்தினால் அல்ல. *அநீதிக்கு எதிராக எம்மால் தொடங்கப்பட்ட போர், இனிவரும் காலத்திலும் தொடரும். *புரட்சி என்பது சொல் அல்ல மாறாக செயல்.

News September 15, 2025

அழுத்தத்திற்கு பணியாத இந்தியா: ரஷ்யா பாராட்டு

image

அமெரிக்கா, Nato நாடுகளின் அழுத்தத்திற்கு பணியாமல், தங்களுடன் நட்புறவுடன் இருப்பதாக இந்தியாவை ரஷ்யா பாராட்டியுள்ளார். இரு இடையிலான நட்பு, நிலைத்தன்மையுடன் மேம்பட்டு வருவதாகவும், இதில் விரிசல் ஏற்படுத்த முயன்றால் தோல்வியே மிஞ்சும் என்றும் கூறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது டிரம்ப் 50% வரிவிதித்ததோடு, ஐரோப்பிய நாடுகளையும் வரிவிதிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2025

இந்தியாதான் முன்பு உலகை வழிநடத்தியது: RSS தலைவர்

image

3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தான் உலகை வழிநடத்தியதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நாடுகளையும் அடக்கவோ, வர்த்தகத்தை அழிக்கவோ மதமாற்றவோ இல்லை எனவும், மாறாக சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரம், அறிவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது மூதாதையர்கள் நமக்கு வழங்கிய ஞானம், இந்தியாவை 3,000 ஆண்டுகளாக சிறந்த நாடாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!