News September 14, 2025

மதுரை மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

மதுரை மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

தியாகராஜர் கல்லூரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

image

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரிகின்றனர்.

News September 15, 2025

கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

image

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

மதுரை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

மதுரை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<> இங்கு க்ளிக் செய்து<<>> அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!