News September 14, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செ.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News September 15, 2025
தாமதமாகும் சாலைப் பணி: 200 விபத்துகள்

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சானமாவு வனப்பகுதியில் பாலம் கட்டும் பணி, கடந்த இரண்டு மாதங்களாகத் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட விபத்துகள் இங்கு நடந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள், இந்த இடத்தை ‘காவு வாங்கும் இடம்’ எனக் குறிப்பிட்டு, அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
News September 14, 2025
கிருஷ்ணகிரி மாணாக்கரிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் இந்த 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க*
News September 14, 2025
BREAKING: கிருஷ்ணகிரிக்கு முதல்வர் வெளியிட்ட 5 அறிவிப்புகள்

✔ அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்
✔ கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்
✔ ஓசூர் எல்சி ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்
✔ ஓசூர் மாநகரை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தயாரிக்கப்படும்
✔ கெலமங்கலத்தில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு தயாரிக்கப்படும்