News September 14, 2025
நடிகர் விஜய்யின் சொத்து இவ்வளவு கோடியா..!

பரப்புரையில் பேசிய விஜய், ‘என்னங்க பெரிய பணம், வேணுங்கிற அளவு பாத்தாச்சு’ என உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அவரது சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும்.
Similar News
News September 15, 2025
மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில் பின்வரும் யோசனைகளை பின்பற்றலாம்: ➤முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும் ➤எண்ணெய்யை லேசாக சூடேற்றி, முடி வேர்க்கால்களை மசாஜ் செய்யவும் ➤தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும் ➤ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
News September 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 15, 2025
ஹாக்கியில் சீனாவிடம் இந்தியா படுதோல்வி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி சீனாவிடம் 4-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியா முதல் கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட சீனா அடுத்தடுத்து கோல்(4) மழை பொழிந்து இந்தியாவை திக்குமுக்காட வைத்தது. இந்த தோல்வியால் இந்தியா நேரடியாக WC-க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.