News September 14, 2025
சேலம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்துள்ளனர். அதன்படி அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ்-102, சாலை விபத்து உதவி-1073, தேசிய நெடுஞ்சாலை உதவி-1033 ஆகிய எண்களை உதவிக்கு அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 11, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இளம் சாதனையாளர் களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
News November 11, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை மண்டலப் பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நரசப்பூர்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (07105/07106] தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவ.16 முதல் ஜன.18 வரை நரசப்பூரில் இருந்து கொல்லத்திற்கும், வரும் நவ.18 முதல் ஜன.20 வரை கொல்லத்தில் இருந்து நரசப்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
News November 11, 2025
சார்லப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை சீசனை முன்னிட்டு சார்லப்பள்ளி-கொல்லம்-சார்லப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (07107/07108) இயக்கப்படுகின்றன. வரும் நவ.17 முதல் ஜன.19 வரை சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.19 முதல் ஜன.21 வரை கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளது.


