News September 14, 2025
BREAKING: நாமக்கல் அருகே 16 பேர் காயம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மசக்காளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தேனீக்கள் கடித்ததில் 9 மாணவிகள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தேனீக்கள் கடித்ததில் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் 7 பேர் என மொத்தம் 16 பேர், சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று (செப். 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால், இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களுக்குப் பிறகு, முட்டை விலை 5 காசுகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 15, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.14 நாமக்கல்-( ராஜமோகன் -9442256423 ) ,வேலூர் -( ரவி -9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி -9498169110 ), திம்மநாயக்கன்பட்டி -(ரவி -9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 14, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் உட்கோட்ட அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.