News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News September 15, 2025
சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது: அமைச்சர் மூர்த்தி

திருச்சியில் நேற்று பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக ஆட்சியை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இதனையடுத்து விஜய்யின் பேச்சு மற்றும் அவருக்கு கூடிய கூட்டம் குறித்து, திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.
News September 14, 2025
ராசி பலன்கள் (15.09.2025)

➤மேஷம் – செலவு ➤ரிஷபம் – தடங்கல் ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – வரவு ➤சிம்மம் – கவலை ➤கன்னி – அமைதி ➤துலாம் – வீம்பு ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – போட்டி ➤மகரம் – பரிசு ➤கும்பம் – நஷ்டம் ➤மீனம் – மகிழ்ச்சி.
News September 14, 2025
சென்சார் போர்டு தடையாக உள்ளது: பா.ரஞ்சித்

வலதுசாரி ஆதரவு மனப்பான்மை கொண்ட சென்சார் போர்டு உறுப்பினர்களை கையாள்வது கடினமாக உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இப்போது, சென்சார் போர்டின் தடைகளை தாண்டி ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக உள்ளதாகவும், மக்களை நம்பியே ‘தண்டகாரண்யம்’ போன்ற படங்கள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். ‘தண்டகாரண்யம்’ படத்தை அதியன் ஆதிரை இயக்க, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.