News September 14, 2025

உப்பை குறைங்க 100 வயசு வரை வாழலாம்

image

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் 88% பேர் பெண்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும், மீன், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாம். அதுமட்டுமல்ல, ஜப்பானியர்கள் உணவில் உப்பின் அளவை குறைவாக பயன்படுத்துவதும் மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கிறதாம்.

Similar News

News September 15, 2025

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

image

மகாராஷ்டிராவில் ஒரு பெண், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். புனேவை சேர்ந்த 27 வயது சாஸ்வத், பிரசவ வலி வந்து சதாரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் முறையில் 3 பெண் மற்றும் 1 ஆண் என 4 குழந்தைகள் பிறந்தன. இவருக்கு முன்பே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதவிர, ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. மொத்தத்தில் இவர் 3 பிரசவங்களில் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

News September 15, 2025

சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது: அமைச்சர் மூர்த்தி

image

திருச்சியில் நேற்று பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக ஆட்சியை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இதனையடுத்து விஜய்யின் பேச்சு மற்றும் அவருக்கு கூடிய கூட்டம் குறித்து, திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.

News September 14, 2025

ராசி பலன்கள் (15.09.2025)

image

➤மேஷம் – செலவு ➤ரிஷபம் – தடங்கல் ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – வரவு ➤சிம்மம் – கவலை ➤கன்னி – அமைதி ➤துலாம் – வீம்பு ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – போட்டி ➤மகரம் – பரிசு ➤கும்பம் – நஷ்டம் ➤மீனம் – மகிழ்ச்சி.

error: Content is protected !!