News April 11, 2024
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?

பெங்களூருவில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னைவாசிகள் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57% மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடும் நிலையில், நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த 4 மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தூத்துக்குடி மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் (அ) மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும்: அன்புமணி

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித் தந்ததே திமுகவின் சாதனை என அன்புமணி சாடியுள்ளார். தனது அறிக்கையில், அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கணக்கு தீர்க்க மக்கள் தயாராக உள்ளதாகவும், தேர்தலில் DMK கூட்டணி மண்ணைக் கவ்வும் என்றும் கூறியுள்ளார்.
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .. கலெக்டர் அறிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


