News April 11, 2024
ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா

RCBக்கு எதிரான IPL போட்டியில் MI வீரர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதலில் கோலியை அவுட்டாக்கிய அவர், தான் வீசிய 3ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள், 4ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை இழந்தார். இந்த போட்டியில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கான பர்ப்பில் தொப்பியும் கைப்பற்றினார்.
Similar News
News January 10, 2026
14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு; IMD

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.
News January 10, 2026
காலையில் 8 மணிக்கே சாப்பிடனுமா?

காலை உணவு என்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்தும் முதல் கட்டமாகும். அதனால், காலை உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ, அவ்வளவு உடலுக்கும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக காலை 8 மணியளவில் காலை உணவு சாப்பிடுவது, உடலின் உயிரியல் கடிகாரத்தை சீரமைக்க, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மற்றும் ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறதாம்.
News January 10, 2026
விஜய் அண்ணா தம்பியோட சின்ன அட்வைஸ்னா!!

காங்கிரஸ் கட்சியை விஜய் நம்ப வேண்டாம் என தேமுதிக மாநாட்டில் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரசியலில் விஜய்க்கு சீரியர் என்ற முறையில் இந்த அட்வைஸ் கொடுப்பதாகவும், திமுக கூட்டணியில் பேரத்தை பேசுவதற்காக மட்டுமே ‘ஜனநாயகன்’ பிரச்னைக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


