News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!
Similar News
News September 14, 2025
நம்ம குறட்டை நமக்கு ஏன் கேட்பதில்லை?

தூக்கத்தின்போது லேசான சத்தம் கேட்டாலும் பலரும் விழித்துக் கொள்வோம். ஆனால், நாமே அதிக சத்தத்தில் குறட்டை விட்டாலும், அது நமக்கு கேட்காது. தொண்டை (அ) மூக்கில் காற்றோட்டம் தடைபடுவதே குறட்டைக்கு காரணம். இது நரம்புகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால், அதனை உணரவோ கேட்கவோ முடியாது. எனினும், நாள்பட்ட குறட்டை பிரச்னைக்கு டாக்டரை அணுகுவது நல்லது. குறட்டை விடும் உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு இதை ஷேர் பண்ணுங்க.
News September 14, 2025
உயர்கல்வியை சீரழிக்கும் திமுக அரசு: அன்புமணி

அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையை குறைத்து, உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என அன்புமணி விமர்சித்துள்ளார். மாணவர் சேர்க்கை செப்., மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. இது அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. உயர்கல்வித்துறையின் சீரழிவுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
News September 14, 2025
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழக்கங்கள் என்ன?

சரியான உணவை சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சாப்பிட்ட பிறகு சரியான பழக்கங்களை கடைப்பிடிப்பதும் முக்கியம். பல நேரங்களில் மக்கள் உணவு சாப்பிட்ட உடனேயே சில தவறுகளைச் செய்கிறார்கள், இது படிப்படியாக செரிமானத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சாப்பிட்டவுடன் என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்..