News September 14, 2025
இளையராஜாவை ’சாமி’ என ரஜினி அழைப்பது ஏன்?

இசைஞானி இளையராஜாவை மேடைகளில் ’சாமி’ என அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் ரஜினி அதற்கான காரணத்தை வெளிபடுத்தியுள்ளார். ஆரம்பகாலத்தில் பேண்ட் சட்டை என சாதாரணமாக இருந்த இளையராஜா, திடீரென ஒருநாள் வெள்ளை வேட்டி கட்டி, ருத்ராட்சம் அணிந்து வந்தார் எனவும், அவரை பார்த்தவுடன் தான் சாமி என அழைத்ததாகவும் இளையராஜா 50 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தலாம்: பிரேமலதா

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு கூட்டங்களில் விஜய்யும் – விஜயகாந்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அதிகமாக காணமுடிந்தது. இந்நிலையில், விஜயகாந்த் தமிழக மக்களின் சொத்து, அவரது புகைப்படத்தை திரைத்துறையினரோ, அரசியல் கட்சியினரோ பயன்படுத்துவதை நாங்கள் நிச்சயமாக தடுக்க மாட்டோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

தீபாவளிக்கு 37 நாள்களே இருக்கும் நிலையில், பட்டாசு விற்பனை இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளதாக பட்டாசு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு தீபாவளிக்கு புகிடார், தர்பூசணி வெடி, குங் பூ பாண்டா, பீட்சா உள்ளிட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், உற்பத்தி குறைந்துள்ளதால் பட்டாசு பற்றாக்குறை ஏற்படும் என்றும், பட்டாசு விலை 10% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
News September 14, 2025
Beauty: வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு விஷயம் போதும்

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? அதனை சரி செய்ய, ➤விளக்கெண்ணெய்யை சூடுபடுத்தி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை 3 நாள்களுக்கு ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்யவும். ➤10 நிமிடங்கள் லேசான மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊறவிடுங்கள். ➤பிறகு தலைக்கு குளித்துவர வழுக்கை விழுந்த இடங்களில் முடி வளரும். அனைத்து ஆண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.