News April 11, 2024

ஆடு, மாடு வாங்க போகும் விவசாயிகளை பிடிக்கிறார்கள்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 50% வியாபாரம் குறைந்து விட்டதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். மாறாக ஆடு, மாடு வாங்கச் செல்லும் விவசாயிகளையும், வியாபாரிகளையும்தான் அவர்கள் பிடிப்பதாக விமர்சித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

image

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 1, 2026

இனி சொத்துக்கள் வாங்க இது தேவையில்லை!

image

வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிலம்/வீடுகளை வாங்க உள்நாட்டினருக்கு TAN நம்பர் தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உள்நாட்டினர் PAN அடிப்படையிலான சலான் மூலம் TDS செலுத்தினால் போதும் என்றும் TAN (வரி பிடிப்பு கணக்கு எண்) பெறுவதற்கான தேவை நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு NRI மற்றும் உள்நாட்டினருக்கு சொத்து வாங்கும் & விற்கும் நடைமுறையை எளிதாக்குகிறது. SHARE IT.

News February 1, 2026

மீண்டும் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் குடை, ரெயின் கோட்டுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது.

error: Content is protected !!