News September 14, 2025
சேலம்: கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க வசூல்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்துத் தெரிவித்ததாக அரசு மருத்துவமனை டாக்டர்.தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வசூல் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Similar News
News September 14, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தொடர் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக மைசூரு- இராமநாதபுரம்- மைசூரு வாராந்திர சிறப்பு ரயில்களை (06237/06238) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. செப்.15- ஆம் தேதி முதல் அக்.28- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
சேலம்: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

சேலம் மக்களே, ▶️இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘ஆசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
▶️இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது.
▶️சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும்.
▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
▶️கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!
News September 14, 2025
சேலம் ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678), திருநெல்வேலி- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22620) ஆகிய ரயில்கள் இன்று (செப்.14) மாற்றுப் பாதையில் இயக்கப்பவதால் கோவை செல்லாது. மாறாக போத்தனூரில் நின்று செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.