News September 14, 2025
காதல் திருமணம்: மனம்விட்டு பேசிய உதயநிதி

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய DCM உதயநிதி, தானும் காதல் திருமணம் செய்தவர்தான் எனவும், அதற்கு எவ்வளவு தடங்கல்கள் வரும் என தனக்கு தெரியும் என்றும் கலகலப்பாக பேசினார். பிறகு, பெரும்பாலான காதல் ஜோடிகளை சேர்த்துவைப்பதால், இது அறநிலையத்துறையா? அன்புநிலையத்துறையா? என நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.
Similar News
News September 14, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நாளையுடன்(செப்.15) நிறைவடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ₹1-க்கு புதிய சிம் கார்டு வழங்கப்படும். அதில், 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா (தினமும் 2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள்!
News September 14, 2025
கடிதம் மூலம் கதறும் திமுக: விஜய்

‘விஜய் வெளியே வரவே மாட்டார்’ என்று ஆள் வைத்து கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கியுள்ளதாக விஜய் திமுகவை நேரடியாக தாக்கியுள்ளார். இதை ஒப்புக்கொள்வது போல, தங்களது கதறலை முப்பெரும் விழா (திமுக) கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். வெளியே கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவுடன் உறவாடுவதும் யார் என்று மக்களுக்கு புரிகிறது என்றும் அட்டாக் செய்துள்ளார்.
News September 14, 2025
முதலில் வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய்: பெ.சண்முகம்

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என விஜய் பேசியதை, ஏதோ தியாகம் செய்வதை போல் ஊடகங்கள் பெரிது படுத்தியுள்ளதாக பெ.சண்முகம் சாடியிருக்கிறார். கம்யூ., தலைவர்கள் மட்டுமின்றி அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்கள் சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்காக தியாகம் செய்வதுதான் கம்யூ., அரசியல்; முதலில் வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய் என அட்வஸ் கொடுத்துள்ளார்.