News September 14, 2025

இந்தியாவின் முதல் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு

image

திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் இந்தியாவின் முதல் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு செப்டம்பர் 13 அன்று தொடங்கியது. உலக நன்மைக்காக 1008 சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து சிவ பூஜை செய்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்த மாநாடு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Similar News

News September 14, 2025

தி.மலை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

தி.மலை: கல்லூரி மாணவன் முதலை கடித்து பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ் (18) என்பவர் சாத்தனூர் அணை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் கால் கழுவச் சென்றபோது, முதலை ஒன்று அவரை கடித்து நீரில் இழுத்துச் சென்றது. இதில், படுகாயமடைந்த முனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

தி.மலை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!