News September 14, 2025
தருமபுரியில் ஒரே நாளில் 1275 வழக்குகளுக்கு தீர்வு

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1157 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கிக் கடன் தொடர்பான 150 வழக்குகளில், 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக, 1275 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு நீதி கிடைத்தது.
Similar News
News September 14, 2025
தருமபுரி மாணாக்கர்களே இந்த எண் இருக்கா!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் இந்த 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம். *இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க*
News September 14, 2025
தருமபுரி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

தருமபுரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தருமபுரி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
BREAKING: தருமபுரி – இ.பி.எஸ் சுற்றுப்பயண தேதியில் மாற்றம்

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் , தருமபுரி மாவட்டத்தில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த எடப்பாடி பழனிசாமி, அதனை செப்.29, 29 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.