News April 11, 2024
தேர்தலுக்குப் பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதி

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் முடிந்த பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதியெனவும், மக்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Similar News
News November 21, 2025
நாகை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

நாகை மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
நாகை மாவட்டத்தில் 13.8 செ.மீ மழை பதிவு

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழையின்றி மந்தமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள்: நாகப்பட்டினம் 3.6 செ.மீ, திருப்பூண்டி 1.9 செ.மீ, வேளாங்கண்ணி 2.4 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, வேதாரண்யம் 1.2 செ.மீ, கோடியக்கரை 1.0 செ.மீ என நாகை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 21, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், சிறப்பு உதவி முகாம் வரும் நவ.22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


