News September 14, 2025
BREAKING: நாடு முழுவதும் இந்த வங்கி சேவை முடங்கியது

HDFC வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். வங்கி சேவை மட்டுமின்றி, UPI பரிவர்த்தனையும் தடைப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான இன்று, காலையிலேயே Server Down என்பதால், கடைகளுக்கு சென்ற பலரும் UPI-ல் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு வேலை செய்யுதா HDFC சேவைகள்?
Similar News
News September 14, 2025
பீர் பிரியர்கள் கவனத்திற்கு..

மதுபானம் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வாசனை மாற்றங்களால், பீர் குடிப்பவர்கள் கொசுக்களை ஈர்க்கும் வாய்ப்பு 1.35 மடங்கு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலை., 1000 கொசுக்கள், 500 மனிதர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில், பீர் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வியர்வை மூலம் 100 மீட்டர் தொலைவிலும் மனித வாசனையை கொசுக்களால் உணர முடியுமாம். உஷாரா இருங்க!
News September 14, 2025
இளையராஜாவை ’சாமி’ என ரஜினி அழைப்பது ஏன்?

இசைஞானி இளையராஜாவை மேடைகளில் ’சாமி’ என அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் ரஜினி அதற்கான காரணத்தை வெளிபடுத்தியுள்ளார். ஆரம்பகாலத்தில் பேண்ட் சட்டை என சாதாரணமாக இருந்த இளையராஜா, திடீரென ஒருநாள் வெள்ளை வேட்டி கட்டி, ருத்ராட்சம் அணிந்து வந்தார் எனவும், அவரை பார்த்தவுடன் தான் சாமி என அழைத்ததாகவும் இளையராஜா 50 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
வாகனம் வாங்க காசு தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

PM E-DRIVE திட்டத்தின் கீழ் EV வாகனங்களை வாங்க அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் பேருந்துகள், ஆம்புலன்ஸ் & ட்ரக்குகளை வாங்க ₹2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு https://pmedrive.heavyindustries.gov.in/models – ஐ பாருங்கள். புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.