News September 14, 2025
GALLERY: மிலிட்டரியில் இந்த நாடுகள் தான் டாப்பு!

ஒரு நாட்டின் ராணுவ படைப்பலம் தான் அதன் வலிமையை உலகிற்கு எடுத்து காட்டுகிறது. அப்படி உலகில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ படைபலத்தை கொண்ட டாப் நாடுகளின் பட்டியலை Global Firepower வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10 பட்டியலில் இருந்தே பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தை Swipe பண்ணவும்.
Similar News
News September 14, 2025
விஜய்யை விட அஜித்துக்கு அதிக கூட்டம் வரும்: சீமான்

திருச்சி பிரசாரத்தில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை விட அஜித், ரஜினி, நயன்தாராவுக்கு அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் எனவும், தான் சிறுவயதில் இருந்தபோது MGR, சிவாஜியை பார்க்க நின்ற தருணங்கள் உண்டு என்றும் கூறினார். நீங்க சொல்லுங்க, யாருக்கு அதிக கூட்டம் வரும்? அஜித்துக்கா? விஜய்க்கா?
News September 14, 2025
ஊறுகாய் போடுபவர் என்று விமர்சித்தனர்: நிர்மலா

ஊறுகாய் போடும் தனக்கு GST-யில் என்ன தெரியும் என்று விமர்சித்திருந்தாலும், மக்கள் நலனே தங்களது இலக்கு என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், ஒருநாள் PM மோடி தன்னை அழைத்து, GST குறித்து பல விமர்சனங்கள் வருவதால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். எனவே, 8 மாதங்களாக பல கட்டங்களாக ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
News September 14, 2025
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.. ரூல்ஸ் மாறுகிறது

ஐகோர்ட் உத்தரவின்படி நவ.30-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டத்திற்கு மதுப்பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.