News September 14, 2025

தேனி: குழந்தையின்மை பிரச்சனைக்கு ஒர் தீர்வு

image

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் காமராஜரின் 123.வது பிறந்தநாளை முன்னிட்டு 123 குழந்தையில்லா தம்பதியினருக்கு இலவச குழந்தையின்மை சிகிச்சை முகாம் இன்று நடைபெறுகிறது. முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. தம்பதிகள் நேரில் பங்கேற்று பயனடையலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

Similar News

News September 14, 2025

க.விலக்கு: ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம்

image

ஆண்டிபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பாண்டியன் (40) நேற்று முன்தினம் (செப் 12) சிலரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முத்தனம்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். முத்தனம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் பாண்டியன் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் வழக்கு (செப்.13) பதிவு செய்துள்ளனர்.

News September 14, 2025

போடி: கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

image

போடி நகர் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது போடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கோட்டைச்சாமி என்பவரும், அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News September 14, 2025

தேனி: மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

image

தேனி மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅வங்கி: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

error: Content is protected !!