News September 14, 2025
கோவை அருகே விபத்தில் பெண் பலி!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், அரசு பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள சாலையில் நேற்று நடந்து சென்ற, ஒரு பெண் மீது அந்த வழியாக வந்த ஒரு வேன் மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் இது குறித்து போக்குவரத்து மேற்கு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், வேன் ஓட்டி வந்த காளீஸ்வரன் (வயது) 22 என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News September 14, 2025
இந்திய-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய கோரி போராட்டம்!

சிவசேனா கட்சி சார்பில் இன்று கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும், நாளை நடைபெற உள்ள இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
News September 14, 2025
கோவையில் சோகம்: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரி பாளையம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 முதல் 30 வயது வரை வரை உள்ள இளைஞர் ஒருவர் ரயில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
News September 14, 2025
கோவை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <