News September 14, 2025
ராமநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழா விவரம்

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா வரும் செப்.21ம் தேதி துவங்குகிறது. அன்று பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். 11 நாட்கள் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வழிபாடு நடைபெறும். முத்தங்கி சேவை, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, கஜலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட அலங்காரங்கள் சிறப்பு. விஜயதசமி நாளில் அம்மன் புறப்பாடு, அம்பு எய்துதல், அசுரன் வதம் நடைபெறும். *ஷேர்
Similar News
News September 14, 2025
இராம்நாடு ஆட்சியர் அறிவிப்பு – மீறினால் உரிமம் ரத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் 40,000 ஹெக்டேர் அளவிலான விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் அரசினால் வழங்கப்படும் யூரியா டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலையை கடைகள் முறையாக விலை பட்டியல் உடன் விற்க வேண்டும் எனவும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
News September 14, 2025
பரமக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு நீண்ட ஆண்டுகளாக ஆணையாளர் இல்லாமல் மக்கள் பணியை மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது முறையான வரி வசூலும் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய தாமரை இன்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பரமக்குடி நகராட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News September 14, 2025
மைசூரில் இருந்து இராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்

மைசூரில் இருந்து இராமநாதபுரத்திற்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மைசூர், மாண்டியா, கெங்கெரி, கே.எஸ்.ஆர் பெங்களூர், பெங்களூர் கண்டோன்மெண்ட், ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம் வருகிறது. இந்த அறிவிப்பை தென் மேற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க