News September 14, 2025

செங்கல்பட்டு அருகே கார் மோதி இளைஞர் பலி

image

மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரத்தைச் சேர்ந்தவர் லதாராம் (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

செங்கை: மழைக்காலம் தொடங்க போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

image

செங்கல்பட்டு மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

செங்கல்பட்டு: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

News September 14, 2025

செங்கல்பட்டு உருவான வரலாறு

image

தமிழ்நாடு மாநிலமாக உருவான போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்று. பின் 1997ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு நகரை தலைமையிடமாக கொண்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!