News September 14, 2025
ஒகேனக்கலில் தொடரும் தடை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Similar News
News September 14, 2025
BREAKING: தருமபுரி – இ.பி.எஸ் சுற்றுப்பயண தேதியில் மாற்றம்

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் , தருமபுரி மாவட்டத்தில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த எடப்பாடி பழனிசாமி, அதனை செப்.29, 29 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
தருமபுரியில் ஒரே நாளில் 1275 வழக்குகளுக்கு தீர்வு

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1157 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கிக் கடன் தொடர்பான 150 வழக்குகளில், 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக, 1275 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு நீதி கிடைத்தது.
News September 14, 2025
தருமபுரி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <