News April 11, 2024

ராணிப்பேட்டையில் ரூபாய் ஒரு கோடி பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனைகளில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 4500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பட்டு வேட்டி துண்டுகள் மற்றும் ரொக்க பணம் அடங்கும். உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

ராணிப்பேட்டையில் திக்குமுக்காடும் மக்கள்!

image

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க வேண்டி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், ராணிப்பேட்டை ஊராட்சிகளில் குடிநீர், மின் விளக்கு, பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் பாதிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஊராட்சி அலுவலங்கள் தொடர்ச்சியாக கிடப்பதும் குறிப்பிடத்தக்கது.

News January 12, 2026

கலவை பகுதியில் வைக்கோல் விலை உயர்வு

image

ராணிப்பேட்டை: கலவை பகுதியில் வைக்கோல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டு வைக்கோல் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. பின்னர், அது 230 ரூபாயாக உயர்ந்தது. தற்போது அந்த விலை மேலும் 20 ரூபாய் அதிகரித்து, ஒரு கட்டு வைக்கோல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீவனப் பற்றாக்குறை , போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வந்துள்ளது.

News January 12, 2026

ராணிப்பேட்டை: ஆம்னி பஸ்ஸில் மோசடியா..? உடனே CALL!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பியாச்சா..? ஆம்னி பஸ்ஸிலோ, அரசு பேருந்திலோ அதீத பண வசூல், மோசடி, இன்ன பிற உதவிகளுக்கான உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, அரசு பேருந்தின் இயக்கம் குறித்த தகவல்களுக்கு 9445014436, ஆம்னி பஸ் புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!