News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
சேலம் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி-மைசூரு இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் (06243/06244) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.19-ஆம் தேதி முதல் நவ.30- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 14, 2025
சேலம்: விஜய் மீது சரமாரி கேள்வி!

த.வா.க தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலை குறித்து பேசினார். அப்போது “தமிழக மக்களுக்காக விஜய் என்ன செய்தார்? அரசியல் பண்பாடு என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. சினிமாவில் பார்த்த அவரை நேரில் பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்” என்று தெரிவித்தார்.