News September 14, 2025
கரூரில் வாகனம் கவிழ்ந்து விபத்து; 16 பேர் படுகாயம்

கரூர் தோகைமலை அருகே குப்பைமேட்டுப்பட்டியை சேர்ந்த சீரங்காயி (40) உள்ளிட்டோர், டாட்டா ஏசி வாகனத்தில் கொசூர் குள்ளாயி அம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரங்காயி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
கரூர்: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <
News September 14, 2025
கரூர்: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <
News September 14, 2025
அரவரக்குறிச்சி: ராஜகோபுரத்துக்கு நிலை கதவு!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு நிலை கதவு அமைக்கும் பணியை கரூர் திமுக கழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்த போது. உடன் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.