News September 14, 2025
நார்ச்சத்து நிறைந்த டாப்-5 உணவுகள்

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணிக்க நார்ச்சத்து மிக அவசியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிப்பதிலும், கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடம் நாம் 25-40 கிராம் நார்ச்சத்து எடுத்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நார்ச்சத்து எடுக்க தவறினால் வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும். நார்ச்சத்து கிடைக்க சாப்பிட வேண்டிய டாப் -5 உணவுகளை தெரிஞ்சுக்கோங்க. SWIPE IMAGES.
Similar News
News September 14, 2025
மத்திய அமைச்சகத்தில் இணைந்த அதிமுக

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக அதிமுக MP இன்பதுரை நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவில் NDA கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா MP-யாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் இன்பதுரைக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. அத்துறையின் கொள்கைகள், திட்டங்கள், கருத்து பரிமாற்றம், நடவடிக்கைகளில் சுதந்திரமாக செயல்பட ஆலோசனை குழு உறுப்பினருக்கு அதிகாரம் உள்ளது.
News September 14, 2025
வங்கியில் 13,217 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கிகளில் காலியாக இருக்கும் 13,217 பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி: பட்டம், எல்எல்பி, டிப்ளமோ, சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம் முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இதற்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News September 14, 2025
விஜய்க்கும் அந்த உண்மை தெரியும்: மா.சுப்பிரமணியன்

திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றாமல் பொய் சொல்லி வருவதாக <<17702086>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மா.சுப்பிரமணியன், அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுவதாகவும், இந்த உண்மை விஜய்க்கும் தெரியும் என்றார். மேலும், விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சாடினார்.