News September 14, 2025
ஹிட்லர் பொன்மொழிகள்

*எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை. *இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே. *தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். *உனது எதிரியை நீ விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்துகொள்கிறாய். *எவராலும் வெற்றியைத் தாங்கிகொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்கமுடியும்.
Similar News
News September 14, 2025
மூலிகை: அரைக்கீரையும் அற்புத நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
✦அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.
✦அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
✦வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
✦அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். SHARE IT.
News September 14, 2025
GALLERY: சிகரம் தொட்ட இசைஞானியின் விருது விழா

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சினிமா- அரசியல் துறை பிரபலங்களும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளையராஜா ஹார்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் அவருக்கு நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த போட்டோஸை DCM உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றை மேலே Swipe செய்து பார்க்கவும்.
News September 14, 2025
திமுகவிடம் கூடுதல் சீட் கேட்போம்: CPI

‘ஆட்சியில் பங்கு’ என்ற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, கூடுதல் சீட்டுகளை ஒதுக்க திமுகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் உள்ளது. இந்நிலையில், CPI தரப்பிலும் கூடுதல் சீட்டுகள் கேட்கப்படும் என, அதன் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 2021 பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில், 6 இடங்களில் CPI போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.