News April 11, 2024
IPL: மும்பை அணி பவுலிங்

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RCB பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் MI 8ஆவது இடத்திலும், RCB 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News August 12, 2025
வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.
News August 12, 2025
விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.
News August 12, 2025
BREAKING: தங்கம் விலை ₹640 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை, 2-வது நாளாக இன்றும் தாறுமாறாக குறைந்து ₹74 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 குறைந்து ₹74,360-க்கும், கிராமுக்கு ₹80 குறைந்து ₹9,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.