News September 13, 2025
இ.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநில குழு செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன், புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
திரு.வி.க.நகரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது

திரு.வி.க.நகர் காவல் குழு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே சந்தேகமாக பையுடன் நின்ற 2 நபர்களை விசாரித்தபோது, 30 கிராம் OG கஞ்சா, 1.100 கிலோ கஞ்சா மற்றும் ₹90,000 பணம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின் நஸ்ரின் என்ற பெண் கைது செய்யப்பட்டு, 17 வயது இளஞ்சிறார் மீது விசாரணை நடைபெறுகிறது. நஸ்ரின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
News September 13, 2025
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரை சந்தித்து உரையாற்றினார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜாவும் உடன் இருந்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.