News September 13, 2025

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 153 மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் ,சேர்த்தல், திருத்தம், மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 153 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 14, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 13, 2025

வேலூர் டிஐஜி தலைமையில் ஆய்வு கூட்டம்!

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி தர்மராஜ் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆலோசிக்கப்பட்டது. இதில் எஸ்.பி மயில்வாகனன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 13, 2025

வேலூர்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-2
மேலும் விவரங்கள் அறிய & விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!