News September 13, 2025
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ஆகஸ்ட்டில் பணவீக்கம் 2%க்கு மேல் பதிவாகியுள்ளதால், அக்டோபரில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என SBI கணித்துள்ளது. GST வரி மாற்றங்களால், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கத்தை 40-45 அடிப்படை புள்ளிகள் வரை குறையலாம். அதேபோல், வரும் காலாண்டிலும் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதால் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது. இது லோன் வாங்கியவர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
Similar News
News September 14, 2025
ராசி பலன்கள் (14.09.2025)

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – அன்பு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – வரவு ➤தனுசு – சுகம் ➤மகரம் – கோபம் ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – திறமை.
News September 14, 2025
இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.
News September 14, 2025
விஜய் விமர்சனத்திற்கு அன்பில் மகேஷ் பதிலடி

2 அமைச்சர்கள் (நேரு, அன்பில்) இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை என்ற விஜய்யின் விமர்சனத்திற்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமை, புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்றவற்றில் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம் என தெரிவித்தார்.