News April 11, 2024
இதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை

70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவிலான பணம் 22 பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் செய்த அவர், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை என்றார். ஆனால், அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் நாட்டின் மிகப்பெரிய செய்தியாக பரவுவதாக குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக உறுதி அளித்தார்.
Similar News
News April 10, 2026
Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ➤போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ➤அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ➤அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.
News April 10, 2026
அரசியல் கட்சியினரே வெயில் நேரத்தில் இதை செய்யுங்க

கோடை வெயில் கொளுத்தி வருவதால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அரசியல் கட்சினருக்குதான் இந்த பதிவு. காலை 6 – மதியம் 12 மணி வரையும், மாலை 3 – இரவு 10 மணி வரையும் பரப்புரை செய்யுங்கள். காரமான & எண்ணெய் உணவுகளை தவிர்த்து, நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்ளவும். பரப்புரையின்போது தொப்பி மற்றும் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும். அதிகப்படியான தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
News April 10, 2026
விஜய்யால் உதயநிதியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூரில் பிரசாரம் செய்ய நாளை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை கடலூரில் பிரசாரம் செய்ய உதயநிதியும் திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தரப்பு முன்பே விண்ணப்பித்ததால், விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடலூரில் உதயநிதியின் பிரசாரம் வேறொரு நாளுக்கு மாற்றப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


