News September 13, 2025

ஸ்டாலின் முகாம்களில் 7,23,482 மனுக்களுக்கு தீர்வு

image

இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Similar News

News September 13, 2025

திரு.வி.க.நகரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது

image

திரு.வி.க.நகர் காவல் குழு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே சந்தேகமாக பையுடன் நின்ற 2 நபர்களை விசாரித்தபோது, 30 கிராம் OG கஞ்சா, 1.100 கிலோ கஞ்சா மற்றும் ₹90,000 பணம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின் நஸ்ரின் என்ற பெண் கைது செய்யப்பட்டு, 17 வயது இளஞ்சிறார் மீது விசாரணை நடைபெறுகிறது. நஸ்ரின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 13, 2025

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகை

image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரை சந்தித்து உரையாற்றினார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜாவும் உடன் இருந்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

News September 13, 2025

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி சேர்க்கை

image

சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக இணையதளத்தில் 370 காலியிடங்கள் உள்ளன. விவரங்களை https://kilpaukmedicalcollege.in/ என்ற பலகையில் காணலாம்.

error: Content is protected !!