News September 13, 2025
வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மாநாடு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தமிழ்நாடு அரசுக்கும் -வெளிநாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
Similar News
News September 13, 2025
சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி சேர்க்கை

சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக இணையதளத்தில் 370 காலியிடங்கள் உள்ளன. விவரங்களை https://kilpaukmedicalcollege.in/ என்ற பலகையில் காணலாம்.
News September 13, 2025
இ.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநில குழு செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன், புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 13, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: முதல்வர் ஆய்வு

தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.