News September 13, 2025
கடலூர்: உணவு சரியில்லையா? இதை பண்ணுங்க!

கடலூர் மக்களே, ஜூலை.1 முதல் உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘TN Food Safety Consumer App’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய கடலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
கடலூரில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (செப்.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.
News September 13, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று (செப்.13) காலை நிலவரப்படி கடலூரில் 37.4 மி.மீ, பண்ருட்டி 34 மி.மீ, சிதம்பரம் 21 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, விருத்தாசலம் 10 மி.மீ, சேத்தியாத்தோப்பு 7 மி.மீ, பரங்கிப்பேட்டை 6 மி.மீ மற்றும் காட்டுமன்னார்கோவிலில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News September 13, 2025
கடலூர் மக்களே.. ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை!

கடலூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<